அல்லு அர்ஜுன் படத்தை இயக்க அட்லி போட்ட கண்டிஷன்

பாலிவுட்டில் 'ஜவான்' படத்தின் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் அட்லி, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுடன் இணைய இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுன் படத்தை இயக்க அட்லி போட்ட கண்டிஷன்
Published on

'ராஜா ராணி' , 'தெறி', 'பிகில்' எனத் தமிழில் ஹிட் படங்களைக் கொடுத்த அட்லி இந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கிய முதல் படம் 'ஜவான்'. முதல் படத்திலேயே ஆயிரம் கோடிக்கும் அதிக வசூலை சாதித்து காட்டிய அவர், சிறந்த இயக்குநருக்கான பல விருதுகளையும் பாலிவுட்டில் வாங்கிக் குவித்தார். அம்பானி வீட்டுத் திருமணக் கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொண்டபோது, "அட்லியின் வாய்ப்புக்காக பாலிவுட் ஹீரோக்கள் காத்திருக்கிறார்கள்" எனச் சொல்லி நடிகர் ரன்வீரும் பெருமைப்படுத்தினார்.

இப்படி ஒரே படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநர் அட்லி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார். இப்போது ரசிகர்கள் பலரும் அவருடைய அடுத்தப் படம் என்ன என்பது குறித்து எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மீண்டும் ஷாருக்கானுடன் இணையப் போகிறார், விஜயின் கடைசிப் படத்தை இயக்கப் போகிறார் எனத் தகவல்கள் வந்து கொண்டிருந்தாலும் தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜூனுடன் இணையப் போகிறார் அட்லி என்பதுதான் அந்த சூப்பர் அப்டேட். அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் அட்லி தன் சம்பளத்தை ரூ.60 கோடியாக உயர்த்திவிட்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இப்படியான சூழ்நிலையில்தான் இந்தப் படம் நிச்சயம் ஹிட் ஆகும் என்றும், அதில் கிடைக்கும் லாபத்தில் தனக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறாராம் அட்லி. இதுதான் அல்லு அர்ஜூன் மற்றும் தயாரிப்புத் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. வழக்கமாக பெரிய ஹீரோக்கள்தான் படத்தின் லாபத்தில் பங்கு கேட்பார்கள். ஆனால், படம் தொடங்குவதற்கு முன்பே நிச்சயம் ஹிட்டாகும் என அடித்துச் சொல்லி லாபத்தில் பங்கு கேட்டிருக்கும் அட்லியின் இந்த செயல் படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறதாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com