ஜப்பானிய சிஇஓ-வுக்கு “சீதா ராம கல்யாணம்” ஓவியத்தை பரிசளித்த நடிகர் அல்லு அர்ஜுன்

இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ‘சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்.
ஜப்பானிய சிஇஓ-வுக்கு  “சீதா ராம கல்யாணம்” ஓவியத்தை பரிசளித்த நடிகர் அல்லு அர்ஜுன்
Published on

இந்தியத் திரைப்படத்துறையின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன், தனது திரைப்படங்கள் மூலமாக மட்டுமல்லாமல், தனது செயல்கள் மூலமாகவும் இந்தியப் பாரம்பரியத்தை உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்பவராகத் திகழ்கிறார். சமீபத்தில் அவர் ஜப்பானைச் சேர்ந்த புகழ்பெற்ற 'கீக் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோமாட்சு கோசானோவை சந்தித்துப் பேசிய நிகழ்வு, இதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

இந்தச் சந்திப்பின் மிக முக்கியமான தருணம், அல்லு அர்ஜுன் அவர்கள் டோமாட்சு கோசானோவுக்கு வழங்கிய பரிசுதான். இந்தியக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ‘சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை அவர் பரிசாக வழங்கினார். இது வெறும் ஒரு கலைப்படைப்பு மட்டுமல்ல; இந்தியப் பண்பாட்டின் ஆணிவேராகக் கருதப்படும் குடும்ப உறவுகள், தியாகம் மற்றும் அறத்தின் அடையாளமாகும்.இந்த ஓவியப் பரிசளிப்பு, இந்தியக் கலாச்சாரத்தின் மீது அல்லு அர்ஜுன் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பையும், உலகளாவிய தலைவர்களிடம் இந்தியப் பாரம்பரியத்தை எப்படிக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவரது தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்துகிறது.

சந்திப்பின் போது, இந்தியாவின் ஆகச்சிறந்த இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் பற்றிய வரலாற்று மற்றும் ஆன்மீகச் செய்திகளை அல்லு அர்ஜுன் பகிர்ந்து கொண்டார். இராமாயணம் என்பது வெறும் கதை மட்டுமல்ல, அது மனித வாழ்வின் வழிகாட்டி என்பதை அவர் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com