ரன்வீர் சிங் நிராகரித்த படத்தில் அல்லு அர்ஜுன் ?


Allu Arjun in the film that Ranveer Singh rejected?
x

சக்திமானாக நடிக்க ரன்வீர் சிங் ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

சென்னை,

சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான், 90-களில் பல எபிசோடுகளாக ஒளிபரப்பப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்த தொடர் குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. இதில் சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இருந்தார்.

இந்த தொடரின் வரவேற்பையடுத்து, சினிமா படமாக உருவாக்க இருப்பதாக சமீபத்தில் முகேஷ் கன்னா தெரிவித்திருந்தார். அதன்படி, சமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

இதில் நவீன கால சக்திமானாக நடிக்க ரன்வீர் சிங் ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முன் தயாரிப்பு பணிகள் கூட தொடங்கப்பட்டிருந்தன. இருப்பினும், ரன்வீர் விலகியதால் இந்த திட்டம் ஒரு தடையை சந்தித்தது.

ரன்வீர் இந்த வேடத்திற்கு பொருத்தமாக இல்லை என்று முகேஷ் கண்ணா கூறினார். அப்போதிருந்து, படம் இப்போது வரை இழுபறியில் இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் பரிசீலிக்கப்படுவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை மலையாள சூப்பர் ஹீரோ படமான "மின்னல் முரளி"யை இயக்கிய பாசில் ஜோசப் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

1 More update

Next Story