பிடித்த மற்றும் நடிக்க விரும்பும் படம் பற்றிய கேள்வி...அல்லு அர்ஜுன் பதில்


Allu Arjun praises Ranbir Kapoors Animal
x

அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படம் ரூ. 1,871 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இப்படத்தையடுத்து அல்லு அர்ஜுன், திரி விக்ரம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும், அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் பார்த்து பிடித்த மற்றும் நடிக்க விரும்பும் படத்தைப் பற்றி ஒரு நேர்காணலில் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அல்லு அர்ஜுன் கூறுகையில்,

"இல்லை. நான் நடிக்க விரும்பும் படம் எதுவும் இல்லை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் உள்ளன. அனிமல் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் அனைவரின் நடிப்பும் அருமையாக இருந்தது. சில தெலுங்குப் படங்களும் எனக்கு பிடிக்கும்' என்றார்.

1 More update

Next Story