அல்லு அர்ஜுனை இயக்கும் லோகேஷ் கனகராஜ் - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சென்னை,
அல்லு அர்ஜுன் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஒரு சிறப்பு வீடியோ மூலம் வெளியான இந்த அறிவிப்பு, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ், இந்தப் படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்கிறது.
அல்லு அர்ஜுன் ஏற்கனவே தமிழ் இயக்குனர் அட்லீயுடன் ஒரு அறிவியல் புனைகதை படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், லோகேஷ் கனகராஜின் படத்தின் படப்பிடிப்பில் அல்லு அர்ஜுன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் அடுத்து தனது சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU)-ன் ஒரு பகுதியாக 'கைதி 2' படத்தைத் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுபோல் தெரிகிறது.






