அட்லீயின் இயக்கத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுன்.. கதாநாயகி இவரா?

அட்லீயின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார்.
அட்லீயின் இயக்கத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுன்.. கதாநாயகி இவரா?
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் புஷ்பா தி ரைஸ் மற்றும் புஷ்பா தி ரூல் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானார். புஷ்பா தி ரைஸ் படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.

இப்போது அனைவரது பார்வையும் அவரது அடுத்த படத்தின் மீது உள்ளது. அதன்படி, அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லீயின் இயக்கத்தில் பிரம்மாண்டமான படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அட்லீயின் இயக்கத்தில் வெளியான 'மெர்சல், பிகில், ஜவான்' ஆகிய படங்களை போன்றே அல்லு அர்ஜுன் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். சன்பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான ஏப்ரல் 8-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க உள்ள கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாகவும் இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற செப்டம்பர் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com