தெலுங்கானா அரசின் "கத்தார் " விருதை வென்ற அல்லு அர்ஜுன்


தெலுங்கானா அரசின் கத்தார்  விருதை வென்ற அல்லு அர்ஜுன்
x

தெலங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல பாடகருமான ‘கத்தார்’ பெயரில் வழங்கப்படும் தெலங்கானா திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி பெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இதுவரை அதிகம் வசூலித்த இந்திய திரைப்படங்கள் பட்டியலில் புஷ்பா 2 இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா கவுரவ விருதான 'கத்தார்' விருதை அல்லு அர்ஜுன் வென்றுள்ளார். 'புஷ்பா 2' படத்தில் நடித்ததற்காக சிறந்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருதை அறிவித்ததற்காக அல்லு அர்ஜுன் தெலுங்கானா அரசு, படத்தின் இயக்குநர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் அல்லு எக்ஸ் தளத்தில் பதிவில் " 'புஷ்பா 2' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இந்த மதிப்புமிக்க கவுரவத்திற்காக தெலுங்கானா அரசுக்கு மனமார்ந்த நன்றி. அனைத்துப் புகழும் எனது இயக்குனர் சுகுமார் , மற்றும் எனது தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த புஷ்பா குழுவினருக்கே சேரும். இந்த விருதை எனது அனைத்து ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன், உங்கள் அசைக்க முடியாத ஆதரவு எனக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது." என கூறியுள்ளார்.

'புஷ்பா' பட இயக்குனர் சுகுமார் பி என் ரெட்டி திரைப்பட விருதை பெற்றுள்ளார்.தெலுங்கானா அரசின் 'கத்தார்' சினிமா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் ஜூன் 14ம் தேதி ஐதாராபாதில் நடைபெறவிருக்கிறது.

1 More update

Next Story