படம் வெளியாவதற்கு முன்பே ரூ.250 கோடி வசூல் சாதனை படைத்த புஷ்பா

அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே ரூ 250 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
படம் வெளியாவதற்கு முன்பே ரூ.250 கோடி வசூல் சாதனை படைத்த புஷ்பா
Published on

ஐதராபாத் ,

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், சுனில், தனஞ்சேயா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. அண்மையில் புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்தின் முதல் பாகம் வரும் 17 ஆம் தேதி திரை அரங்கில் வெளியாகிறது . இந்த நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன்பே சாட்டிலைட் , திரையரங்கு , ஆடியோ மற்றும் டிஜிட்டல் உரிமை விற்பனை மூலம் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இதை தவிர இப்படத்தின் அனைத்து மொழிகளுக்குமான டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளம் ஒன்று பல கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com