அல்லு அர்ஜுனின் “ராக்கா” படத்தின் தீம் பாடல் வெளியானது

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ராக்கா’ படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயராகி வருகிறது.
அல்லு அர்ஜுனின் “ராக்கா” படத்தின் தீம் பாடல் வெளியானது
Published on

‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ('AA22xA6') என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தது. இதில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அட்லீ - அல்லு அர்ஜுனின் AA22xA6 படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். அல்லு அர்ஜுனின் 22ஆவது படம் பான் வேர்ல்டு படமாக உருவாக இருக்கிறது. இப்படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இந்தபடத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. அதாவது, இந்த படத்திற்கு ‘ராக்கா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சாய் அபயங்கர் இசையில் உருவாகி வரும் ‘ராக்கா’ படத்தின் தீம் பாடல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com