ரஜினியுடன் இணைந்து பணிபுரிய எப்போதுமே தயார் : கமல்ஹாசன்

'விக்ரம்' படத்தின் வெற்றி கொண்டாட்டம் இன்று நடைபெற்றது
ரஜினியுடன் இணைந்து பணிபுரிய எப்போதுமே தயார் : கமல்ஹாசன்
Published on

சென்னை,

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான 3 தினங்களில் சுமார் 100 கோடிக்கு மேல் வசூலித்து விக்ரம் திரைப்படம் சாதனை படைத்தது.

இந்த நிலையில் 'விக்ரம்' படத்தின் வெற்றி கொண்டாட்டம் இன்று நடைபெற்றது .அதில் பேசிய கமல்ஹாசன் ,ரஜினியுடன் இனைந்து பணிபுரிய எப்போதும் தயார் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com