நான் மிருககாட்சி சாலை மிருகமா? புகைப்படம் எடுத்தவர்களை சாடிய நடிகை டாப்சி

நான் மிருககாட்சி சாலை மிருகமா? என புகைப்படம் எடுத்தவர்களை நடிகை டாப்சி அளித்துள்ள பேட்டியில் ஆவேசமாக கூறியுள்ளார்.
நான் மிருககாட்சி சாலை மிருகமா? புகைப்படம் எடுத்தவர்களை சாடிய நடிகை டாப்சி
Published on

தமிழில் பிரபல நடிகையாக இருந்த டாப்சி தற்போது இந்தியில் அதிக படங்களில் நடித்து வருகிறார். டாப்சி வெளியே போகும் போது ரசிகர்களும் ஊடகத்தினரும் புகைப்படம் எடுப்பதும் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பதும் வழக்கமாக நடக்கிறது. டாப்சியின் செயலை வலைத்தளங்களில் பலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். இதுகுறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில், ''நான் 10 வருடங்களாக இந்தி படங்களில் நடிக்கிறேன். எனது ஆளுமை பற்றி ஊடக பிரிதிநிதிகளுக்கு தெரியும், படப்பிடிப்பில் மட்டுமே கேமரா முன் நிற்பேன். நான் வீட்டை விட்டு வெளியே போகும்போது என்னை படம் எடுப்பதை விரும்பவில்லை. காரின் ஜன்னலில் கேமரா வைத்தும் வீடியோ எடுக்கிறார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. நடிகையாக இருந்தாலும் எனது சொந்த வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. நான் பாதுகாவலர்கள் இல்லாமல் தெருக்களில் நடக்கிறேன். எதிர்காலத்தில் எனது பாதுகாவலர்களால் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் என்னை மரியாதையுடன் நடத்துங்கள். நடிகையாக இருப்பதால் மோசமான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. என்னை கேமராவுடன் பின் தொடர்கிறீர்களே, நான் மிருக காட்சி சாலையின் மிருகமா?''என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com