ரூ.1 கோடி சம்பளம் கேட்கிறேனா? நடிகர் கலையரசன் ஓபன் டாக்


ரூ.1 கோடி சம்பளம் கேட்கிறேனா? நடிகர் கலையரசன் ஓபன் டாக்
x

எனக்கு அவ்வளவு பெரிய தொகையை யாரும் கொடுப்பது கிடையாது என்று கலையரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்து வரும் கலையரசன், மீனாட்சி ஆனந்த் தயாரித்து சிவராஜ் இயக்கியுள்ள 'டிரெண்டிங்' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரியாலயா கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த படம் விரைவில் ரிலீசுக்கு வருகிறது. பட விழாவில் கலையரசனிடம், படங்களில் நடிக்க உங்கள் மானேஜர் மூலமாக ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சம்பளம் கேட்கிறீர்களாமே, உண்மையா? என கேட்கப்பட்டது.

இதற்கு கலையரசன் பதிலளிக்கையில், ''இது பொய்யான தகவல். எனக்கு மானேஜரே கிடையாது. நான் அவ்வளவு சம்பளம் வாங்குவதும் இல்லை. எனக்கு அவ்வளவு பெரிய தொகையை யாரும் கொடுப்பதும் கிடையாது. மாதம் ரூ.30,000 சம்பளம் கிடைக்குமா? என்று இருந்த நான், இன்று ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறேன். நல்ல படங்களுக்காக எனது சம்பளத்தையும் குறைத்துக்கொள்கிறேன். ஓரிரு படங்களில் சம்பளம் கூட இன்னும் தராமல் இருக்கிறார்கள். அந்த பணம் கிடைத்தால் போதும், நானே இரு படங்கள் தயாரிப்பேன்'', என்றார்.

1 More update

Next Story