ஹன்சிகாவை பிரிகிறேனா? கணவர் தரப்பு கொடுத்த விளக்கம்

நடிகை ஹன்சிகாவும் அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக தகவல் பரவிவருகின்றன.
ஹன்சிகாவை பிரிகிறேனா? கணவர் தரப்பு கொடுத்த விளக்கம்
Published on

'சின்ன குஷ்பு', 'அமுல்பேபி' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டவர் ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப்படத்திலும் பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி. கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்பவரை ஹன்சிகா காதல் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை ஹன்சிகாவும் அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக தகவல் பரவிவருகின்றன. ஆனால், இது குறித்து நடிகை ஹன்சிகா தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகாவின் கணவர் சோஹைல் கட்டாரியா, நாங்கள் பிரிந்து விட்டதாக பரவும் தகவல்கள் உண்மையில்லை என்று கூறியுள்ளார் என செய்திகள் பரவி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com