ஒத்தையல நிக்கேன், தில் இருந்தா மொத்தமா வாங்கல, ரஜினியின் காலா டீசர் எப்படி ?

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசரை அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் இன்று வெளியிட்டார். படத்தின் தெலுங்கு, இந்தி டீசரும் வெளியீடப்பட்டது. #Kaala #KaalaTeaser #Rajinikanth
ஒத்தையல நிக்கேன், தில் இருந்தா மொத்தமா வாங்கல, ரஜினியின் காலா டீசர் எப்படி ?
Published on

சென்னை

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் காலா. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

இப்படத்தை அடுத்த ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடும் என்று தனுஷ் அறிவித்திருந்தார்.

ஆனால், ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக காலா டீசர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தனுஷ் தெரிவித்தார். இதனால் மார்ச் 2ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (2-ம் தேதி) இரவு 12 மணியளவில் காலா டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டார். அந்த டீசரில் இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! என்னும் வசனம் இடம்பெற்றிருந்தது.

ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் மாஸ் பஞ்ச் வசனங்கள் இதில் இருக்கிறது. டீசர் ஆரம்பத்தில் காலா என்ன பேருய்யா இது என்று நானா படேகரின் கேள்விக்கு காலான்னா கருப்பு, காலன் கரிகாலன், சண்டை போட்டு காக்கிறவன் என்று பின்னணியில் பதில்.

அதேபோல் நானா படேகரின் மற்றொரு வசனத்திற்கு ரஜினி கருப்பு உழைப்போட வண்ணம், என் இடத்துல வந்து பாரு அழுக்கு அத்தனையும் உன்னை மாதிரி இருக்கும் என்ற ரஜினியின் வசனம்பேசி உள்ளார்.

இறுதியில் ரஜினி ஒத்தையல நிக்கேன், தில் இருந்தா மொத்தமா வாங்கல என்று சொடக்கு போட்டு ரஜினி கூப்பிடுவது சூப்பர்.

ரஜினி நடித்த "காலா" படத்தின் தெலுங்கு, இந்தி டீசரும் வெளியீடப்பட்டு உள்ளது.

டீசர் வெளியான சில மணி நேரங்களில் 29 லட்சத்தை தொட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com