முதல் திருமண நாள் - சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை அமலாபால் கணவர்

நடிகை அமலாபாலுக்கு அவரது கணவர் முதல் திருமண நாளுக்கு அழகான இடத்திற்கு அழைத்து சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
முதல் திருமண நாள் - சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை அமலாபால் கணவர்
Published on

திருவனந்தபுரம்,

தமிழ் சினிமாவில் 'வீரசேகரன்' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலா பாலை, சர்ச்சை நாயகியாக மாற்றியது 'சிந்து சமவெளி' திரைப்படம். இதைத்தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்த 'மைனா' திரைப்படம் இவருடைய திரை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அமலா பால், 'தலைவா' மற்றும் 'தெய்வத்திருமகள்' படத்தில் நடிக்கும்போது இப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு, இரு தரப்பு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான நான்கு வருடங்களில், இருவரும் ஒருமித்த மனதுடன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். அதன் பின்னர் தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை அமலாபால் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த ஜுன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது, மகனுக்கு இலை என பெயர் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை அமலாபாலுக்கு அவரது கணவர் முதல் திருமண நாளன்று அழகான இடத்திற்கு அழைத்து சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதன் வீடியோவை நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

தம்பதியினர் தங்களது முதலாவது திருமணநாளை கேரள மாநிலம் குமரகோமில் உள்ள போட் ஹவுஸில் கொண்டாடியுள்ளனர். அப்போது அமலாபாலை தனியாக படகில் ஒரு இடத்துக்கு அழைத்து சென்ற அவரது கணவர், அங்கு கடலின் நடுவே சிவப்பு கம்பளம் விரித்த மேடையில் ஒரு ரொமாண்டிக் டின்னரை ஏற்பாடு செய்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

View this post on Instagram

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த ஆடுஜீவிதம் திரைப்படம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது..

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com