இந்தி படத்தில் அமலா பால்

அமலா பாலை இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் அஜய்தேவ்கானின் போலா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்தி படத்தில் அமலா பால்
Published on

தென் இந்திய வட இந்திய படங்களுக்கான இடைவெளி சமீப காலமாக குறைந்துள்ளது. தென் இந்திய படங்களை இந்தி ரசிகர்கள் விரும்பி பார்க்க தொடங்கி உள்ளனர். இதனால் தமிழ், தெலுங்கு நடிகர், நடிகைகளை இந்தி படங்களில் நடிக்க வைக்க அங்குள்ள இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். திரிஷா இந்தி படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து வருகிறார். பேமிலிமேன் 2 இந்தி வெப் தொடருக்கு பிறகு சமந்தாவுக்கு இந்தி பட வாய்ப்புகள் வந்துள்ளன. தற்போது அமலா பாலை இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் அஜய்தேவ்கானின் போலா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கார்த்தி நடித்து தமிழில் வெற்றி பெற்ற கைதி படத்தின் இந்தி ரீமேக்காக போலா படம் தயாராகிறது. இந்த படத்தை அஜய்தேவ்கானே இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பில் அமலா பால் பங்கேற்க உள்ளார். படத்தில் தபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com