நடிகை அமலாபாலுக்கு ஆண் குழந்தை ... 'இலை' என பெயர் சூட்டல்

நடிகை அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த விஷயத்தை அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
நடிகை அமலாபாலுக்கு ஆண் குழந்தை ... 'இலை' என பெயர் சூட்டல்
Published on

திருவனந்தபுரம்,

தமிழ் சினிமாவில் 'வீரசேகரன்' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலா பாலை, சர்ச்சை நாயகியாக மாற்றியது 'சிந்து சமவெளி' திரைப்படம். இதைத்தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்த 'மைனா' திரைப்படம் இவருடைய திரை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அமலா பால், 'தலைவா' மற்றும் 'தெய்வத்திருமகள்' படத்தில் நடிக்கும்போது இப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு, இரு தரப்பு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான நான்கு வருடங்களில், இருவரும் ஒருமித்த மனதுடன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். அதன் பின்னர் தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை அமலாபால் கடந்த வருடம் நவம்பர் 3-ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

நடிகை அமலாபால் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். திருமணம் ஆன இரண்டே மாதத்தில் தாங்கள் பெற்றோர் ஆன விஷயத்தை அறிவித்தது இந்த ஜோடி. கடந்த வாரத்தில் நடிகை அமலாபால் குழந்தை பிறப்பை எதிர்நோக்கி இருப்பதாகச் சொல்லி மருத்துவமனையில் இருந்து புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

View this post on Instagram

இப்போது கடந்த 11-ம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக இவர்கள் மகிழ்ச்சியான செய்தி சொல்லி இருக்கிறார்கள். குழந்தைக்கு இலை எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இயற்கை மீது அதீத ஆர்வம் கொண்டவரான அமலாபால் காடுகள், மலைகளில் பயணம் செய்வதில் பிரியம் கொண்டவர். அதனால், இயற்கை சார்ந்தே இருக்க வேண்டும் என தங்கள் மகனுக்கும் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளது இந்த ஜோடி. குழந்தைக்கு தங்கள் வாழ்த்துகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த ஆடுஜீவிதம் திரைப்படம் பிரமாண்ட வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது..

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com