கோவில் யானையுடன் அமலாபால்- வைரலாகும் புகைப்படம்

யானைக்கு உணவு அளித்த அமலாபால் தனது மகன் இலையை யானையிடம் ஆசீர்வாதம் பெற வைத்துள்ளார்.
அமலாபால்
Published on

குடும்பத்துடன் கோவிலில் சிறப்பு வழிபாடு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால், ஜகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இலை என்ற மகன் உள்ளார். குடும்பத்துடன் அடிக்கடி சுற்றுலா சென்று வரும் அமலாபால், சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்கு கணவர் மற்றும் மகனுடன் சென்றுள்ளார்.

யானையிடம் ஆசீர்வாதம் பெற்ற இலை

கோவில் தரிசனத்தின்போது, யானைக்கு உணவு அளித்த அமலாபால் தனது மகன் இலையை யானையிடம் ஆசீர்வாதம் பெற வைத்துள்ளார். அந்த தருணங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "என் வாழ்வின் பெரும் அன்பான என் செல்லக்குழந்தைக்கு இன்று 2½ வயது நிறைவடைகிறது. மற்றொருவரை நேசிக்கும் வேளையில் நமக்கானதையும் நாம் கைவிட்டு விடக்கூடாது என்பதை இந்த அன்பும் தாய்மையும் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

நெகிழ்ச்சியாக கொண்டாடப்பட்ட பிறந்தநாள்

அமலாபாலின் மகன் இலையின் இரண்டாவது பிறந்தநாள் கடந்த 11-ஆம் தேதி குடும்பத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமலாபாலும், அவரது கணவர் ஜகத் தேசாயும் மகனுடன் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com