அமலாபாலின் டிரெண்டிங் வீடியோ: அடங்கேப்பா...மலைத்த ரசிகர்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெய்வ திருமகள், தலைவா ஆகிய இரண்டு படங்களில் நடிகை அமலா பால் நடித்துள்ளார்.
அமலாபாலின் டிரெண்டிங் வீடியோ: அடங்கேப்பா...மலைத்த ரசிகர்கள்
Published on

சென்னை,

சிந்து சமவெளி, மைனா, தெய்வத்திருமகள் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமலாபால். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு திரை உலகில் நடித்து வந்த அமலாபால் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இலாய் என்ற மகன் இருக்கிறார். குடும்பத்துடன் கோவாவில் அமலாபால் தற்போது வசித்து வருகிறார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகிய அமலாபால் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதையடுத்து புதிய படங்களில் அவரை நடிக்க வைப்பதற்காக பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றனர்.

நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பதற்கு அவர் தயாராக இருக்கிறார் என்றும்; மகன் கொஞ்சம் வளர்வதற்காகத்தான் காத்திருக்கிறார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அவர் மீண்டும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்தநிலையில், அமலா பாலும், ஜெகத்தும் எப்போதுமே ஜாலியாகத்தான் இருப்பார்கள். அந்தவகையில் அவர்கள் தொடர்பான வீடியொ ஒன்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது. அதாவது இரண்டு பேரும் ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள்.

அப்போது அமலாவை கட்டி அணைத்த ஜெகத் தேசாய், அவரை செம ரொமான்ஸோடு கொஞ்சினார். அதை பார்த்து அமலா பால் இதனால்தான் காதலில் விழுந்தார் என்று கூறுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ பெட்ரூமில் செய்ய வேண்டியதை எல்லாம் பப்ளிக்காக செய்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா என்று மலைத்தும் பதிவுகளை போட்டு வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com