பாலிவுட்டில் அறிமுகமாகும் 'அமரன்' பட இயக்குனர்

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.
பாலிவுட்டில் அறிமுகமாகும் 'அமரன்' பட இயக்குனர்
Published on

சென்னை,

'ரங்கூன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அமரன்' படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் சுமார் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் ஓ.டி.டி.யில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பல படங்களில் கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இவர் நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாகவும், இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் மற்றொரு புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பாலிவுட் சினிமாவில் இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாக உள்ளார். 'அனிமல்' படத்தின் தயாரிப்பாளர் புஷன் குமார் தயாரிக்கும் புதிய படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com