பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர்


Amaran director to make his Bollywood debut
x

அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இவர் இயக்க இருக்கிறார்.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி , பாலிவுட்டில் படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கி மார்ச் மாதம் முடிவடையும் என கூறப்படுகிறது.

அதன் பின்பு, விக்கி கவுசல் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் பாலிவுட் படத்திற்கு ராஜ்குமார் பெரியசாமி தேதி ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது. இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் வருகிற நாட்களில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story