'அமரன்' படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
'அமரன்' படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்!
Published on

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 700-வது பாடலும் இப்படத்தின் முதல் பாடலுமான 'ஹே மின்னலே' பாடல் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமரன் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள், சாய் பல்லவியுடான காதல் காட்சிகள் என டிரெய்லர் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், 2 மணி 48 நிமிடங்கள் கால அளவு கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com