'அமரன்' படம் : டப்பிங் பணிகளை நிறைவு செய்த சிவகார்த்திகேயன்

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள 'அமரன்' படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் நிறைவு செய்துள்ளார்.
'அமரன்' படம் : டப்பிங் பணிகளை நிறைவு செய்த சிவகார்த்திகேயன்
Published on

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'அமரன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் 'அமரன்' படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்தநிலையில், தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் 'அமரன்' படத்திற்கான டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்த வீடியோ இடம் பெற்றுள்ளது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com