நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் திரையில் 'அமரன்' படம்

அமரன் திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் திரையில் 'அமரன்' படம்
Published on

நியூயார்க்,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 700-வது பாடலும் இப்படத்தின் முதல் பாடலுமான 'ஹே மின்னலே' பாடல் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அமரன் படத்தின் விளம்பரத்திற்காக நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் திரையில் அமரன் படத்தின் சில காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த திரையில் திரையிடப்படும் முதல் தென்னிந்திய திரைப்படமாக இப்படம் உள்ளது. இது குறித்த பதிவை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com