பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் 'அமரன்' வெற்றிவிழா !

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள அமரன் படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் 'அமரன்' வெற்றிவிழா !
Published on

சென்னை,

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. மேலும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம், தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தாண்டு வெளியான படங்களில் அதிகம் வசூலித்த படங்களில் இந்த படமும் ஒன்றாகும். இந்தநிலையில் விரைவில் 'அமரன்' படத்தின் வெற்றி விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகளால் படக்குழுவினருக்கு விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com