அமரன் படத்தின் 'வெண்ணிலவு சாரல்' வீடியோ பாடல் வெளியீடு

'அமரன்' படத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'வெண்ணிலவு சாரல்' வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
அமரன் படத்தின் 'வெண்ணிலவு சாரல்' வீடியோ பாடல் வெளியீடு
Published on

சென்னை,

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளி பண்டிகையில் வெளியான படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

அமரன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே முதல் நாளில் பெரிய வசூலைப் பெற்ற திரைப்படம் இதுதான். மேலும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது. 'அமரன்' சிவகார்த்திகேயன் கெரியரில் சிறப்பான தொடக்கத்தை பெற்ற படமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'வெண்ணிலவு சாரல்' என்ற இப்பாடலின் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com