விவேகம் டிரைலர் பார்த்த பல திரைப்பிரபலங்கள் பிரமிப்பு

விவேகம் டிரைலர் பார்த்த பல திரைப்பிரபலங்கள் பிரமிப்பு
விவேகம் டிரைலர் பார்த்த பல திரைப்பிரபலங்கள் பிரமிப்பு
Published on

அஜித்தின் விவேகம் டிரைலர் வெளியாகி தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

வீரம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் 3வது முறையாக இணைந்து நடித்துள்ள படம் விவேகம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் 24ம் தேதி வெளியாகயிருக்கிறது. இந்நிலையில், படத்திற்கு முன்பாக படத்தின் டிரைலர் வெளியாகி சாதனை படைக்க தொடங்கியுள்ளது. நேற்று வெளியான விவேகம் படத்தின் டிரைலர் தற்போது 8 மணி நேரத்தில் கடந்தாண்டு வெளியான தெறி பட டிரைலரின் சாதனையை முறியடித்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் இதுவரை பார்க்காத ஸ்டைலில் மிரட்டி எடுக்க, ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர், ட்ரைலர் வந்த ஒரு சில நிமிடங்களிலேயே உலக அளவில் ட்ரெண்ட் அடித்து அசத்தினர்.

இந்த டிரைலர் ரிலீஸ் ஆகி 10 நிமிடத்தில் ஐம்பதாயிரம் லைக்ஸும் அரைமணி நேரத்தில் 1லட்சம் லைக்ஸை தாண்டியுள்ளது. இதன் மூலம் விவேகம் டிரைலர், டீஸர் சாதனை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.படத்தின் டிரைலர் வெளியாகி 12 மணிநேரத்தில் 26 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது.  டிரைலர் இன்று இரவுக்குள் 50 லட்சம் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விவேகம் டிரைலர் குறித்து திரைப்பிரபலங்கள் எல்லோரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com