ஜானி டெப் தனது கன்னத்தில் அறைந்தது குறித்து ஆம்பர் ஹேர்ட் கோர்ட்டில் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு..!!

’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' புகழ் ஜானி டெப், ஆம்பர் ஹேர்டை 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
Image Courtesy : AFP
Image Courtesy : AFP
Published on

வாஷிங்டன்,

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் ஜானி டெப். இவர் தனது 50 வயதுக்கு மேல் தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல்அவரை கரம்பிடித்தார். பின்னர் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்துக்குப் பிறகு, ஜானி தன்னை திருமண வாழ்வின் போது கடுமையாகத் தாக்கியது உள்ளிட்ட அவரை பற்றி பல பரபரப்பு குற்றசாட்டுகளை அம்பெர் ஹெர்ட் 2018 ஆம் ஆண்டு முன்வைத்து இருந்தார். இதற்காக அவர் நஷ்ட ஈடு தர வேண்டும் என ஆம்பர் ஹேர்ட் தெரிவித்து இருந்தார்.

அதை தொடர்ந்து ஜானி டெப் பதிலுக்கு வழக்கு தொடர்ந்தார், அதில் "தனது புகழுக்கு களங்கம் விளைவித்தது உட்பட பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து இதற்கு நஷ்ட ஈடாக அவர் 350 கோடி ரூபாய் தனக்கு தர வேண்டும் எனகூறி கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறார்.

இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகினறனர். இந்நிலையில், இந்த வழக்கு கோர்ட்டில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நேரில் ஆஜராகிய ஆம்பர் ஹேர்ட் மேலும் பல குற்றசாட்டுகளை ஜானி மீது முன்வைத்தார். ஜானி தன்னை முதல் முறையாக அறைந்தது குறித்து அவர் பேசுகையில் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். ஜானி டெப் தன்னை பலமுறை உடல் ரீதியாக துன்புறுத்தியதை நீதிபதிகளிடம் அவர் கூறினார்.

இவர்கள் இருவரின் இந்த வழக்கு தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com