50 வயதில் நடிகரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் நடிகை


Ameesha patel open having crush star hero
x
தினத்தந்தி 27 Sept 2025 12:45 PM IST (Updated: 29 Sept 2025 10:00 AM IST)
t-max-icont-min-icon

பிரபல ஹாலிவுட் நடிகரை திருமணம் பண்ண விரும்புவதாக அமிஷா படேல் கூறி இருக்கிறார்.

மும்பை,

விஜய் நடித்த புதிய கீதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமிஷா படேல். தொடர்ந்து பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையான அமிஷா படேல் 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவரை திருமணம் பண்ண விரும்புவதாக அமிஷா படேல் கூறி இருக்கிறார்.

அவர் கூறுகையில், "டாம் குரூஸை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயதில் இருந்தே டாம் குரூஸை ரொம்ப பிடிக்கும். அவருக்காக நான் எதையும் செய்யத் தயாராக இருக்கேன் . வாய்ப்பு கிடைத்தால் அவரையே கல்யாணம் பண்ணிக்குவேன்" என்றார்.

1 More update

Next Story