“ஓம்” சின்னம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்த அமெரிக்க மாடல் அழகிக்கு வலுக்கும் எதிர்ப்பு

அமெரிக்க மாடல் அழகி கருப்பு நிற பிகினி உடையுடன், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் “ஓம்” சின்னம் அச்சிடப்பட்ட துணியை மேலாடையாக அணிந்திருந்தார்.
“ஓம்” சின்னம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்த அமெரிக்க மாடல் அழகிக்கு வலுக்கும் எதிர்ப்பு
Published on: 

அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி அணிந்த “ஓம்” சின்னம் பொறிக்கப்பட்ட ஆடை, கோடிக்கணக்கான மக்களின் ஆன்மிக நம்பிக்கை, பக்தி மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடைய புனித அடையாளம், அதை உடையாக அணிவதா? என்று கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி கெண்டல் ஜென்னர். இவர் டி.வி. நடிகையும் ஆவார். கெண்டல் ஜென்னரும் அவரது சகோதரி கைலி ஜென்னரும் சமீபத்தில் சொகுசு படகில் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கைலி ஜென்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கெண்டல் ஜென்னர் கருப்பு நிற பிகினி உடையுடன், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் 'ஓம்' சின்னம் அச்சிடப்பட்ட துணியை மேலாடையாக அணிந்திருந்தார். அவரது சகோதரி கைலி ஜென்னர் கருப்பு நிற ஆடையில் காட்சியளித்தார்.

கெண்டல் ஜென்னரின் உடையில் ஓம் சின்னம் இடம்பெற்றதற்கு இந்தியாவை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்து மத அமைப்புகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். 'ஓம்' என்பது வெறும் அலங்காரச் சின்னம் அல்ல என்றும், கோடிக்கணக்கான மக்களின் ஆன்மிக நம்பிக்கை, பக்தி மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடைய புனித அடையாளம், அதை உடையாக அணிவதா? என்று கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். கெண்டல் ஜென்னர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கருத்துகளும் பதிவிடப்பட்டு வருகிறது.

X