

பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அமிதாப் பச்சன். பிக் பி என அழைக்கப்படும் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு ரூ.1600 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. “கோன் பனேகா குரோர்பதி” மற்றும் விளம்பரங்களில் தற்போது நடித்து வரும் அமிதாப் பச்சன் கணிசமான வருவாயை ஈட்டி வருகிறார். இதனால் ரியல் எஸ்டேட் துறையில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த 2024ஆம் ஆண்டு பச்சன் குடும்பம் ரியல் எஸ்டேட்டில் ரூ.100 கோடிக்கு மேல் முதலீடு செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைச் சுற்றி அமிதாப் பச்சன் நிலம் வாங்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். அயோத்தியில் ஏற்கனவே மூன்று இடங்களில் நிலம் வாங்கியிருக்கும் அமிதாப் பச்சன், தற்போது புதிதாக 2.67 ஏக்கர் நிலத்தை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மதிப்பு ரூ.35 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய நிலத்தை நீண்டகால முதலீடு நோக்கில் அமிதாப் பச்சன் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.