அம்மா என்னும் மந்திரமே - 'மார்க் ஆண்டனி' படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது..!

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது.
அம்மா என்னும் மந்திரமே - 'மார்க் ஆண்டனி' படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது..!
Published on

சென்னை,

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது.

அதன்படி 'அம்மா என்னும் மந்திரமே' என்ற பாடலை வெளியாகி உள்ளது. மதுரகவி எழுதியுள்ள இந்த பாடலை சைந்தவி பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com