காதலில் விழுந்தாரா அம்மு அபிராமி?...வைரலாகும் பதிவு


Ammu Abhirami who fell in love...the post goes viral
x

image courtecy:instagram@abhirami_official

தினத்தந்தி 11 Jun 2024 8:31 AM GMT (Updated: 11 Jun 2024 8:32 AM GMT)

சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்த அம்மு அபிராமி 'குக் வித் கோமாளி' சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சென்னை,

'ராட்சசன்' படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அம்மு அபிராமி. பின்பு, வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல பெயர் பெற்றுத் தந்தது. சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்த அம்மு அபிராமி 'குக் வித் கோமாளி' சமையல் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.

இந்நிலையில், அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திவ் மணியுடன் அம்மு அபிராமிக்கு காதல் மலர்ந்திருப்பதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பார்த்திவ் மணியுடன் எடுத்தப் புகைப்படங்களைத் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து, 'பிறந்தநாள் வாழ்த்துகள் மணி. பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றி!' என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் 'நீங்கள் காதலை உறுதி செய்ததற்கு நன்றி' எனக் கூறி வாழ்த்துகளைக் தெரிவித்து வருகின்றனர்.


Next Story
  • chat