எமி ஜாக்சன் காதலரின் சொத்து ரூ.3,500 கோடி

நடிகை எமிஜாக்சனுக்கும், இங்கிலாந்தில் வசிக்கும் பிரான்ஸ் தொழில் அதிபர் ஜார்ஜ் பெனாய்ட்டுவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
எமி ஜாக்சன் காதலரின் சொத்து ரூ.3,500 கோடி
Published on

விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். இது எமிஜாக்சனுக்கு 4-வது காதல். ஏற்கனவே இந்தி நடிகர் பிரகத் பாபர் அடுத்து பாக்சர் ஜோ சில்க்ரிக் ஆகியோருடன் காதலில் இருந்தார்.

கடைசியாக 22 வயது நடிகரான ரியான் தாமசுடன் 6 மாதங்கள் சேர்ந்து வாழ்ந்து பிரிந்தார். இப்போது ஜார்ஜ் பெனாய்ட்டுடன் இணைந்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.

எமிஜாக்சன் காதலிக்கும் ஜார்ஜ் பெனாய்ட்டுவின் சொத்து விவரம் வெளியாகி உள்ளது. இவருக்கு இருக்கும் மொத்த சொத்தின் மதிப்பு 400 மில்லியன் பவுண்டுகள் என்று கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

எமிஜாக்சன் தமிழில் மதராசபட்டணம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி, 2.0 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com