புது கதாநாயகனின் அதிரடி படம்

புது கதாநாயகனின் அதிரடி படம்
Published on

வேகமாக பைக்கில் செல்லும் வீடியோக்களை யுடியூப்பில் வெளியிட்டு பிரபலமான`யூ-டியூப்' வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு `மஞ்சள் வீரன்' என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் இதில் பல முன்னணி நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர். கூல் சுரேஷ் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி செல்அம் டைரக்டு செய்கிறார். `அனைத்து வயதினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமான ஆக்ஷன் திரைப்படமாக தயாராகிறது' என்று அவர் தெரிவித்தார். டி.டி.எப் வாசன் 2 மாதம் நடிப்பு பயிற்சி எடுத்து நடிக்கிறார் என்றும் அவர் கூறினார். பட்ஜெட் பிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி இணைந்து தயாரிக்கின்றனர். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com