"என் தமிழுக்கு நியாயம் செய்த கலைஞன்"... விஜயை வாழ்த்திய வைரமுத்து!

முதலமைச்சர் விஜய் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
"என் தமிழுக்கு நியாயம் செய்த கலைஞன்"... விஜயை வாழ்த்திய வைரமுத்து!
Published on

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல் அமைச்சருமான விஜய் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தவெகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்கள். சமூக வலைதளங்களிலும் #HBDVijay ஹேஷ்டேக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன. விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து முதல்-அமைச்சர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

இன்று

தமிழ்நாட்டின் முதலமைச்சர்

ஜோசப் விஜய் அவர்களின்

பிறந்தநாள்

என் பாடலைக் கலைசெய்த

என் தமிழுக்கு நியாயம்செய்த

ஒரு கலைஞன்

தமிழ்நாட்டு முதலமைச்சராய்ப்

பிறந்தநாள் காண்பது

பெருமை தருகிறது

குன்றாத உடல்நலத்தோடும்

குன்றுபோல் மனவளத்தோடும்

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com