’ஒரு சகாப்தத்தின் முடிவு’ - 'விஜய்' குறித்து பேசிய பிரீத்தி முகுந்தன்

பிரீத்தி முகுந்தன் தற்போது மலையாளத்தில் சர்வம் மாயா படத்தில் நடித்துள்ளார்.
சென்னை,
’ஸ்டார்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி, தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை பிரீத்தி முகுந்தன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் விஜய் குறித்து பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் பேசுகையில், 'சின்ன வயசுல இருந்து விஜய் படம் பார்த்து தான் வளர்ந்து இருக்கோம். அவரோட துப்பாக்கி மற்றும் கில்லி படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஜனநாயகன் திரைப்படத்தை கண்டிப்பாக திரையரங்குகளில் பார்ப்பேன். ஒரு சகாப்தத்தின் முடிவுபோல இருக்கிறது. படப்பிடிப்பு இருந்ததால் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவுக்கு செல்ல முடியவில்லை ’ என்றார்
பிரீத்தி முகுந்தன் தற்போது மலையாளத்தில் சர்வம் மாயா படத்தில் நடித்துள்ளார். நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் கடந்த 25-ம் தேதி திரைக்கு வந்தது. இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
Related Tags :
Next Story






