"திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" - பாக்யராஜுக்கு பினராயி விஜயன் அஞ்சலி

கே. பாக்யராஜ் அவர்களின் மறைவால் ஆழ்ந்த துயரமடைந்தேன் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
"திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" - பாக்யராஜுக்கு பினராயி விஜயன் அஞ்சலி
Published on

சென்னை,

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் (73) திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான திரைக்கதை, வசனம் மற்றும் நகைச்சுவை மூலம் பல வெற்றிப் படங்களை கொடுத்து புகழ்பெற்றவர்.

பாக்யராஜின் இந்த திடீர் மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பினராயி விஜயன் பாக்யாராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,பாக்யராஜ் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்ததாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற இயக்குநர், நடிகர் மற்றும் திரைக்கதையாசிரியர் கே. பாக்யராஜ் அவர்களின் மறைவால் ஆழ்ந்த துயரமடைந்தேன்.

தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான முத்திரை பதித்த அவர், தனது சிறந்த படைப்புகள் மூலம் மலையாளிகளின் அன்பையும் பெற்றார். அவரது மறைவு திரைப்பட உலகிற்கும் கலாச்சாரத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அஞ்சலி. என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com