ராஜ்கிரணுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்: நெகிழ்ந்து பேசிய சூரி

ராஜ்கிரண் சார் அவர்களின் நடிப்பு எனக்கு வாழ்க்கைப் பயணத்தில் மறக்கமுடியாத ஒரு மகத்தான கற்றல் அனுபவமாகும் என்று சூரி தெரிவித்துள்ளார்.
ராஜ்கிரணுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்: நெகிழ்ந்து பேசிய சூரி
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் கடந்த 16-ந் தேதி 'மாமன்' படம் வெளியானது. பிரசாந்த் பண்டிராஜ் இயக்கிய இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகர் ராஜ்கிரணுடன் நடித்த அனுபவத்தை நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில், "ராஜ்கிரண் சார் அவர்களின் நடிப்பு எனக்கு வாழ்க்கைப் பயணத்தில் மறக்கமுடியாத ஒரு மகத்தான கற்றல் அனுபவமாகும். மாமன் படத்திற்கு அவரைப் போலப் பெரும் வரமாக ஒருவர் இருக்கவே முடியாது. 'சிங்கம்' என்ற கதாபாத்திரத்தை அவர் நடித்ததில்லை அந்த பாத்திரத்தை முழுமையாக உணர்ந்து, ஒவ்வொரு சுவாசத்திலும் அதை வாழ்ந்தார். அவரது ஆழமான உணர்ச்சி வெளிப்பாடுகள், குறிப்பாக விஜி மேடம் அவர்களுடன் பகிர்ந்த அழகான கேமிஸ்ட்ரி, அந்தக் கதையின் நட்பும் நேசமும் பூரணமாகத் திரையிலே பெருகச் செய்தது.

இந்திய சினிமாவின் வரலாற்றில் தனி இடம் பிடித்துள்ள ராஜ்கிரண் சார் அவர்களுடன் ஒரு காட்சியில் மட்டுமல்ல, ஒரு முழு படத்தையே பகிர்ந்து நடிக்க முடிய்ந்தது என் வாழ்வின் மிகச் சிறந்த ஆசீர்வாதம். தன்னம்பிக்கையும், எளிமையும் நிரம்பிய அந்த மனிதரிடம் இருந்து நேரிலேயே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பது, என் வாழ்க்கையில் என்றும் ஒளிரும் ஒரு பொன்னாலைப்போல் இருக்கும். நன்றியுடன்… நெஞ்சார்ந்த நன்றியோடு… இந்த பயணத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டவனாகவே இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com