மீனாட்சி சவுத்ரி - நவீன் பொலிஷெட்டி படத்தின் 2-வது பாடல் வெளியீடு


AnaganagaOkaRaju 2nd Single RajuGaariPelliRo out now
x

மீனாட்சி சவுத்ரி தற்போது நடித்து வரும் படம் 'அனகனக ஓக ராஜு'.

சென்னை,

மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கும் 'அனகனக ஓக ராஜு' படத்திலிருந்து ’ராஜு காரி பெல்லி’ பாடல் வெளியாகி இருக்கிறது.

தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. அதனைத்தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' விஜய்யின் 'தி கோட்' , துல்கர் சல்மானுடன் லக்கி பாஸ்கர் , வருன் தேஜுடன் மட்கா ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார்.

சமீபத்தில் வெங்கடேஷுடன் 'சங்கராந்திகி வஸ்துன்னம் 'படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வரும் மீனாட்சி சவுத்ரி அடுத்ததாக நடித்து வரும் படம் 'அனகனக ஓக ராஜு'

தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் மாரி இயக்குகிறார். இப்படத்தில் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் 2-வது பாடல் ’ராஜு காரி பெல்லி’ வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story