பாபி சிம்ஹா நடிக்கும் 'நான் வயலன்ஸ்' படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு

‘மெட்ரோ' பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் தற்போது இயக்க இருக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பாபி சிம்ஹா நடிக்கும் 'நான் வயலன்ஸ்' படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு
Published on

நடிகர் பாபி சிம்ஹா, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா மற்றும் காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து சூது கவ்வும், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்றவர். குறிப்பாக ஜிகர்தண்டா படத்தில் இவரின் நடிப்புக்கு தேசிய விருது கிடைத்தது. கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது இயக்க இருக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

அந்த வகையில், ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது.

ஏ.கே. பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் தொடர்பான இதர அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படம் 2024 ஆண்டிலேயே வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com