விருது விழாவில் தந்தையுடன் நடனமாடிய பிரபல நடிகை - வீடியோ வைரல்


Ananya Panday dances to dad Chunkys hit track ‘Main Tera Tota’, steals hearts with father-daughter bond, watch here
x

அனன்யா பாண்டே சமீபத்தில் ’கேசரி: அத்தியாயம் 2’ ல் நடித்திருந்தார்.

சென்னை,

நடிகை அனன்யா பாண்டே ஒரு விருது வழங்கும் விழாவில் தனது தந்தை சங்கி பாண்டேவுடன் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 17 -ம் தேதி நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் தனது தந்தை சங்கி பாண்டே நடித்த பிரபல பாடலான 'மைன் தேரா தோடா து மேரி மைனா'-க்கு அனன்யா நடனமாடினார். இதில் சுவாரசியம் என்னவென்றால் அந்த பாடலுக்கு சங்கி பாண்டேவுடன் நடனமாடியதுதான்.

இது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியாகவும், ஏக்கமாகவும் உணர வைத்தது. மறக்கமுடியாத இந்த தருணத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து கொண்ட அனன்யா பாண்டே, "அப்பாவின் பாடல்களில் நடனமாடுவது மிகவும் வேடிக்கையானது" என்று பதிவிட்டிருக்கிறார்.

அனன்யா பாண்டே சமீபத்தில் 'கேசரி: அத்தியாயம் 2' ல் நடித்திருந்தார். அதனையடுத்து, தர்மா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் காதல் படமான 'சந்த் மேரா தில்' படத்தில் லக்ஷசயா லால்வானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

1 More update

Next Story