

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனன்யா பாண்டே. இவர் ‘ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2', 'காலி பீலி', கெஹ்ரையான்', 'லைகர்', 'டிரீம் கேர்ள் 2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அனன்யா பாண்டே பகிர்ந்தார்.
அவர் கூறும்போது, "என் தனிப்பட்ட வாழ்க்கை மேடு-பள்ளங்கள் கொண்டது. சினிமாவும் அப்படித்தான். சாதனைகளையும், சோதனைகளையும் மாறி மாறி பார்த்து வருகிறேன். நான் கற்றுக்கொண்ட பாடம் மிக முக்கியமானது.
இங்கு கருத்துகளை துணிச்சலாக சொல்லிவிட வேண்டும். வேண்டும் என்று சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, வேண்டாம் என்று நினைக்கும் விஷயங்களுக்கு 'நோ' என்று அழுத்தமாக சொல்லிவிடுவது நல்லது. அது பிரச்சினைகளில் இருந்து நம்மை காப்பாற்றிவிடும். பிடிக்காத விஷயங்களுக்கு நடிகைகள் 'நோ' சொல்ல பழகிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.