

கேன்ஸ் பட விழா நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இந்த விழாவில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த படவிழாவில் இந்தியாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா சிறந்த நடிகைக்காக விருதை வென்றுள்ளார். கேன்ஸ் பட விழாவில் 'அன் செர்ட்டன் ரெகார்ட்' பிரிவுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.
'ஷேம்லெஸ்' (Shameless) படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வாங்கும் முதல் இந்திய நடிகை இவர் ஆவார். இந்த படத்தை பல்கேரிய திரைப்பட தயாரிப்பாளர் கான்ஸ்டன்டைன் போஜனாவ் இயக்கியுள்ளார். டெல்லி விபச்சார விடுதியில் போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடும் பாலியல் தொழிலாளியின் பயணத்தை சித்தரிப்பதாக இப்படம் அமைந்துள்ளது.
அனசுயா, தனது வெற்றியின் மூலம், இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா அளித்த பேட்டியில்,''எங்கள் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டபோது, நான் பரவசத்துடன் நாற்காலியில் இருந்து குதித்தேன்." என கூறியுள்ளார்.
View this post on Instagram