இரவு 12 மணிக்கு கால் செய்த ஹீரோ...பயந்த நடிகை - பிறகு நடந்த டுவிஸ்ட்

இரவில் ஹீரோ செய்த போன் கால் பற்றி நடிகை ஸ்ரவந்தி கூறினார்.
இரவு 12 மணிக்கு கால் செய்த ஹீரோ...பயந்த நடிகை - பிறகு நடந்த டுவிஸ்ட்
Published on

சென்னை,

பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஸ்ரவந்தி சோக்கரப்பு. அதில், வெற்றியாளராக இல்லாவிட்டாலும், தனது தன்னம்பிக்கை, பேச்சுத்திறன் மற்றும் நடிப்பால் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது தெலுங்கு தொலைக்காட்சியில் பிஸியான தொகுப்பாளராக வலம் வருகிறார். இதற்கிடையில், சில திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். அந்தவகையில், அவர் தற்போது நடித்துள்ள ““ஹே பால்வந்த்”” திரைப்படம் நேற்று வெளியானது.

முன்னதாக இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஸ்ரவந்தி, தனது தொழில்வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது இரவில் ஒரு ஹீரோ செய்த போன் கால் பற்றி கூறினார்.

Also Read
படப்பிடிப்பு பிஸியிலும் ரசிகர்களை மறக்காத தனுஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்
இரவு 12 மணிக்கு கால் செய்த ஹீரோ...பயந்த நடிகை - பிறகு நடந்த டுவிஸ்ட்

அவர் பேசுகையில், “சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவை தொகுத்து வழங்கினேன். சில காரணங்களால் அந்த நிகழ்ச்சி முடிய மிகவும் தாமதமானது. அப்போது இரவு சுமார் 12 மணியளவில் அந்த படத்தின் ஹீரோ இன்ஸ்டாகிராமில் எனக்கு மெசேஜ் அனுப்பி, நேரம் கிடைக்கும்போது கால் செய்ய சொன்னார். அதை பார்த்ததும் எனக்கு பயமாக இருந்தது. நான் எதாவது தவறாக பேசிவிட்டேனா என்ற கவலை வந்தது. நிகழ்ச்சியை நன்றாகவே செய்தேன் என்று நினைத்தேன்.

எனது எண்ணை அனுப்பி, நாளை அழைக்கிறேன் என்றேன். ஆனால் உடனே அவர் எனக்கு போன் செய்தார். அவர் ‘நீங்கள் எங்கள் பட விழாவை மிகவும் சிறப்பாக நடத்தினீர்கள். ஆரம்பத்தில் பார்த்த ஸ்ரவந்திக்கும் இப்போது பார்க்கும் ஸ்ரவந்திக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. உங்களைப் பற்றியும் உங்கள் பணியைப் பற்றியும் எனக்கு பெருமையாக உள்ளது’ என்று பாராட்டினார். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com