ஆண்ட்ரியா நடித்துள்ள 'கா' படத்தின் டிரைலர் வெளியீடு..!

நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள 'கா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

சென்னை,

நடிகை ஆண்ட்ரியா 'கா' என்ற கதாநாயகியை மையமாக கொண்ட திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் நாஞ்சில் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா வனவிலங்கு புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். மேலும் சலீம் கவுஸ், கமலேஷ், அக்ஷிதா, நவீன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'கா' திரைப்படத்திற்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எலிசா படத்தொகுப்பு செய்துள்ளார். ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்த நிலையில் 'கா' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

ஆண்ட்ரியாவின் ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ள டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com