ஆண்ட்ரியா பகிர்ந்த “வடசென்னை” படத்தின் புகைப்படம் வைரல்

நடிகை ஆண்ட்ரியா ‘வடசென்னை’ படத்தில் இடம்பெற்ற சந்திரா கதாபாத்திர புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
சென்னை,
தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இப்போது பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவரது கெரியரிலேயே முக்கியமான படம் வடசென்னை. 2018ம் ஆண்டு வெளியான இந்த படத்தினை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இதில் அமீரின் மனைவியாக சந்திரா என்ற கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். தனது கணவரை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக காத்திருப்பதும், கிடைக்கும் சந்தர்ப்பத்தையெல்லாம் தனக்காக மாற்றிக்கொள்வதும் என ஆண்ட்ரியாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இவரது நடிப்பில் சமீபத்தில் ‘மாஸ்க்’ படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, வடசென்னை உலகில் சிம்புவை வைத்து வெற்றி மாறன் ‘அரசன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அது வில்லன் கதாபாத்திரமா அல்லது வேற ஏதேனும் கதாபாத்திரமா என்பது தெரியவில்லை.
இந்நிலையில், ஆண்ட்ரியா ‘வடசென்னை’ படத்தில் இடம்பெற்ற சந்திரா கதாபாத்திர புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் ‘அரசன்’ படத்திலும் இவர் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் கிளப்பி வருகிறது.






