''சக்தி ஷாலினி'' படத்தில் கியாரா அத்வானிக்கு பதில் அனீத் பத்தாவா?

சயாராவில் கதாநாயகியாக நடித்திருந்தவர் அனீத் பத்தா
Aneet Padda replacing Kiara Advani in Shakti Shalini?
Published on

சென்னை,

நடிகை அனீத் பத்தா, 'சக்தி ஷாலினி' என்ற ஹாரர்-காமெடி படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் பதில் அளித்துள்ளது.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சயாராவில் கதாநாயகியாக நடித்திருந்தவர் அனீத் பத்தா. அப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

இதனையடுத்து அவர், கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படும் 'சக்தி ஷாலினி' ஹாரர்-காமெடி படத்தில் அவருக்கு பதிலாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மேடோக் பிலிம்ஸ் இதற்கு பதிலளித்துள்ளது. இது குறித்து வெளியாகி உள்ள பதிவில், "எங்கள் ஹாரர்-காமெடி படம் மீது உங்களுக்கு உள்ள உற்சாகத்தை நாங்கள் உண்மையிலேயே மதிக்கிறோம். அதே நேரத்தில் சக்தி ஷாலினி படத்தின் நடிகர்கள் பற்றி பரவும் அனைத்தும் ஊகம் மட்டுமே. ஊடகங்கள் தவறான தகவல்களைத் தவிர்க்கவும், அதிகாரபூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com