

மதுரை,
ரசிகர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து, மண் சோறு சாப்பிட்டு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். ரஜினிகாந்தின் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்பதுடன், அவருக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று (அக்டோபர் 15) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள், அவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி பெற வேண்டும் எனப் பல்வேறு வழிகளில் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள வெயில் வந்த அம்மன் கோவிலில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர்.
இதில் ரசிகர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து, மண் சோறு சாப்பிட்டு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். ரஜினிகாந்தின் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்பதுடன், அவருக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டனர். திரைப்படம் வெளியாகும் நாளில் ரசிகர்கள் மேற்கொண்டுள்ள இந்த வழிபாடு கவனம் பெற்றுள்ளது.