புதிய படத்தில் கமிட்டான ஏஞ்சலினா ஜோலி!


Angelina Jolie has committed to a new film!
x

ஏஞ்சலினா ஜோலி நடிகையாக மட்டுமில்லாமல் பல படங்களை இயக்கியும் இருக்கிறார்

மும்பை,

ஹாலிவுட் பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவர் நடிகையாக மட்டுமில்லாமல் பல படங்களை இயக்கியும் இருக்கிறார்.

ஆனால், சமீபகாலமாக முன்புபோல அவரை திரையில் காண முடியவில்லை. இந்நிலையில், ஏஞ்சலினா ஜோலியை திரையில் காணாமல் சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தி வெளியாகி உள்ளது.

அதன்படி, 'வேர்ல்ட் வார் ஜி' பட இயக்குனர் மார்க் பார்ஸ்டர் இயக்கத்தில் பிரெட்ரிக் பேட்மேன் நாவலை தழுவி உருவாக உள்ள 'ஆன்சியஸ் பீப்பிள்' படத்தில் சாரா என்கிற கதாபாத்திரத்தில் ஏஞ்சலினா ஜோலி நடிக்கிறார்.

வங்கி ஊழியராக இருக்கும் சாரா கிறிஸ்துமஸ் சமயத்தில், வங்கி கொள்ளையர்களால் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளில் ஒருவராக சிக்கிக்கொள்கிறார். அதற்கு பின்பு என்ன நடக்கப்போகிறது என்பதுதான் கதை. ஏற்கனவே இந்த நாவல் நெட்பிளிக்ஸில் ஒரு வெப் தொடராக வெளியாகி இருந்தது.

1 More update

Next Story